லொஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக, 2025 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருதுகள் நடைபெறுமா இல்லையா என்பது தொடர்பில் மேலும் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விருது வழங்கும் விழாவை ரத்து செய்யுமாறு பலர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
இதற்கான வேட்புமனு அறிவிப்பு நேற்று வெளியிடப்பட இருந்த நிலையில், அதை ஜனவரி 23ஆம் திகதிக்கு ஏற்பாட்டாளர்கள் ஒத்திவைத்துள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் 2025ஆம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருதுகள் ரத்து செய்யப்படலாம் என வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
97வது அகடமி விருதுகள் அல்லது ஒஸ்கார் விருதுகள் மார்ச் 2ஆம் திகதி நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.