13.8 C
Scarborough

2025 ஆம் ஆண்டில் கனடா வழங்கும் 10 வேலைவாய்ப்புகள்!

Must read

கனடா அரசு, Parks Canada மற்றும் இதர நிறுவனங்களின் மூலம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் 10 சிறந்த வேலைவாய்ப்புகளை வழங்குகிறது.

இவை, கனடாவின் புகழ்பெற்ற பெற்ற புவியியல் மற்றும் பாரம்பரிய தளங்களில் பணியாற்றுவதற்கான சிறந்த வாய்ப்புகளை தருகின்றன.

நிபுணர்கள் மற்றும் மாணவர்களுக்கு கூடுதலான அனுபவத்துடன் கூடிய தகுதியான வேலைகளை இந்த வேலைவாய்ப்புகள் வழங்குகின்றன.

விண்ணப்பத்திற்கு இப்போது திறக்கப்பட்டுள்ள பதவிகள் பற்றிய முக்கிய விவரங்கள் கீழே உள்ளன

1. பார்வையாளர்களுக்கான சேவைகள் மற்றும் தொடர்பு நிலைகளை நிரப்புதல்
தொலைதொடர்பு உதவியாளர் (Communications Assistant)
– இடம்: Southwestern Ontario
– வேலைசெய்யும் இடங்கள்: ஹாமில்டன், நயாகரா-ஆன்-தி-லேக், லீமிங்டன்
– பணி: பாரம்பரிய தளங்கள் மற்றும் பார்க் தகவல்களை சமூக ஊடகங்களின் மூலம் பிரசாரம் செய்தல்
– சம்பளம்: $18.42/மணி
– விண்ணப்பிக்க கடைசி நாள்: 2025 ஜனவரி 31

விசிட்டர் சர்வீசஸ் அடென்டெண்ட் II (Visitor Services Attendant II)
– இடம்: பசிபிக் ரிம் தேசிய பூங்கா, பிரிட்டிஷ் கொலம்பியா
– பணி: பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மற்றும் தகவல்களை வழங்குதல்
– சம்பளம்: மணிக்கு $27.47 முதல் $29.85 வரை
– விண்ணப்பிக்க கடைசி நாள்: 2025 ஜனவரி 9

2. நிர்வாக மற்றும் மனிதவள பணிகள்
நிர்வாக உதவியாளர் (Administrative Assistant)
– இடம்: ஜாஸ்பர் தேசிய பூங்கா, ஆல்பர்டா
– சம்பளம்: $57,397 – $69,317
– விண்ணப்பிக்க கடைசி நாள்: 2025 ஜனவரி 5

மனிதவள உதவியாளர் (HR Assistant )

– இடம்: ஹாலிபாக்ஸ் மற்றும் மெயிட்லாண்ட் பிரிட்ஜ், நவா ஸ்கோஷியா
– சம்பளம்: $61,980 – $69,317
– விண்ணப்பிக்க கடைசி நாள்: 2025 ஜனவரி 16

3. மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள்

– பதவி: Student Field Technician
– இடம்: பான்ஃப் தேசிய பூங்கா, ஆல்பர்டா
– பணி: உயிரி மற்றும் சூழல் பாதுகாப்பு
– சம்பளம்: $22.56 – $27.68/மணி
– விண்ணப்பிக்க கடைசி நாள்: 2025 ஜனவரி 8

மேலும், லோயர் ஃபோர்ட் கேரி தேசிய வரலாற்று தளம் மற்றும் ஃபண்டி தேசிய பூங்கா உட்பட ஒன்ராறியோ, மனிடோபா மற்றும் நியூ பிரன்சுவிக் முழுவதும், மாணவர்களுக்கான பல வேலை வாய்ப்புகள் உள்ளன.

பாதுகாப்பு, பாரம்பரிய விளக்கக்காட்சி மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் அனுபவத்தைப் பெற விரும்பும் மாணவர்களுக்கு இந்த வேலை சிறந்தவை. இந்த பதவிகளுக்கான சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு $17.36 முதல் $27.68 வரை இருக்கும்.

4. பராமரிப்பு பணிகள்

– பதவி: Maintenance Worker II & III
– இடம்: ஜாஸ்பர் தேசிய பூங்கா மற்றும் ராக்கி மவுண்டன் ஹவுஸ், ஆல்பர்டா
– சம்பளம்: $27.30 – $31.73/மணி
– விண்ணப்பிக்க கடைசி நாள்: 2025 ஜனவரி 9
– பதவி: Visitor Facilities Attendant, Visitor Services Attendant, etc.,
– இடம்: ஜாஸ்பர் தேசிய பூங்கா மற்றும் லேக் லூயிஸ்
– பணி: தூய்மையை பராமரித்தல் மற்றும் பூங்கா பார்வையாளர்களுக்கு ஆதரவளித்தல்
-விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 6, 2025 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை

பார்க்ஸ் கனடாவின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு பக்கத்திற்கு சென்று, வேலை விவரங்கள் மற்றும் தகுதி விபரங்களை பார்க்கவும். தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் திறமைகள் மற்றும் அனுபவங்களை சிறப்பாக சுட்டிக்காட்டி விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்புகள், 2025-இல் பரந்த அளவிலான அனுபவங்களுடன் உங்கள் பயணத்தை தொடங்க உதவும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article