19.5 C
Scarborough

2025-ல் கனடாவின் தனிநபர் வருமான வரி வரம்புகள் உயர்வு

Must read

2025-ஆம் ஆண்டில், கனடாவின் வருமான வரி வரம்புகளை Canada Revenue Agency (CRA) சற்று மாற்றியுள்ளது.

பணவீக்கத்தை மனதில் வைத்து, வரம்புகளை புதுப்பித்துள்ளதால், இவ்வருடம் நீங்கள் செலுத்த வேண்டிய வரி அளவில் மாற்றங்கள் இருக்கும்.

2025-ல் தனிநபர்களுக்கான வருமான வரி வரம்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

– $57,375 அல்லது அதற்கும் குறைவானவர்க்கு– 15%

– $57,375 முதல் $114,750 வரை – 20.5%

– $114,750 முதல் $177,882 வரை – 26%

– $177,882 முதல் $253,414 வரை – 29%

– $253,414-க்கு மேல் – 33%

2025-இல், குறியீட்டு அதிகரிப்பு (indexation increase) 2.7% ஆகும், இது 2024-இல் இருந்த 4.7% உயர்வை விட குறைவாகும்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், மூலதன ஆதாய வரி (Capital Gains Tax) விகிதத்தை உயர்த்த அரசாங்கம் முன்மொழிந்தது.

$250,000 வருமானத்தை மீறும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மூலதன ஆதாய வரி விகிதம் ஒரு பங்கு முதல் இரண்டு பகுதிகளுக்கு உயர்த்தப்பட்டது.

ஆனால், ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததும், நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதும், இந்த வரி உயர்வு சட்டமாக மாறவில்லை.

தற்காலிகமாக, CRA முன்மொழிந்த வரி உயர்வை (2024 ஜூன் 25 முதல்) நடைமுறையில் அமல்படுத்தியுள்ளது. இருப்பினும், இது நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டது.

நாடாளுமன்றம் மீண்டும் கூட்டம் கூடிய பிறகு, இந்த மசோதா மீண்டும் அனுமதிக்கப்படலாம். ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் லிபரல் அரசாங்கம் தோல்வி அடைந்தால், இந்த முயற்சி முழுமையாக தோல்வியடையும் வாய்ப்புகள் உள்ளன.

இந்த வரி உயர்வுக்கு எதிராக செல்வந்தர்கள் மற்றும் மருத்துவத் துறை போன்ற சில தொழில்துறைகள் கண்டனம் தெரிவித்தன. சிலர், இந்த வரி காரணமாக வைத்தியர்கள் பணியை விட்டு விடும் நிலைக்கு செல்லலாம் என்றும் கூறினர்.

வரி அதிகரிக்கப்பட்டாலும், Canada Child Benefit போன்ற சில அரச உதவித் திட்டங்கள் இவ்வருடம் அதிகரிக்கப்பட உள்ளன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article