15.1 C
Scarborough

2024-ல் 3.75 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கிய கனடா., பெரும்பான்மை இந்தியர்கள்!

Must read

கனடா 2024-ஆம் ஆண்டில் 3,74,832 பேருக்கு புதிய குடியுரிமை வழங்கியுள்ளது, இதில் இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

Immigration, Refugees and Citizenship Canada (IRCC) நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்த ஆண்டறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டது.

2024 குடியுரிமை வழங்கல் விவரம்

கனடா 2024-இல் 217 நாடுகளில் இருந்து புதிய குடிமக்களை வரவேற்றுள்ளது.

2024-ல் குடியுரிமை பெற்றவர்களில் 23.43 சதவீதம் மக்கள் இந்தியர்களாக உள்ளனர்.

ஏப்ரல்-ஜூன் காலத்தில் அதிகபட்சமாக 1,04,218 பேர் குடியுரிமை பெற்றுள்ளனர்.

டிசம்பர் மாதம் மிகக் குறைந்த எண்ணிக்கையாக 18,160 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய (2023) ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2024-ல் குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை 5125 குறைந்துள்ளது.

கனேடிய குடியுரிமை அதிகமாக பெற்ற முக்கிய நாடுகள் மற்றும் எண்ணிக்கை (2024)

இந்தியா- 87,812

பிலிப்பைன்ஸ் – 37,843

சீனா – 14,134

நைஜீரியா – 13,210

பாகிஸ்தான் – 10,831

அமெரிக்கா- 9,560

பிரேசில் – 9,381

பிரான்ஸ் – 9,250

குடிவரவு மாற்றங்கள்

2025-ல் 3,95,000 புதிய permanent residents அனுமதிக்க கனடா திட்டமிட்டுள்ளது.

2026 மற்றும் 2027-இல் இலக்குகளை 3,80,000 மற்றும் 3,65,000 ஆகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்காலிக குடியேற்றத்திற்கும் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.

கனடா பாஸ்போர்ட் தரநிலை

2025 Henley Passport Index பட்டியலில் கனேடிய பாஸ்போர்ட் 7-வது இடம் பெற்றுள்ளது.

கனேடிய பாஸ்போர்ட் மூலம் 188 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.

மாணவர் விசா மாற்றங்கள்

2025ல் 4,37,000 மாணவர் விசாக்கள் வழங்கப்படும், இது 2024யில் இருந்து 10% குறைவு.

புதிய நிதி தேவைகள், வேலை விதிகள், மற்றும் கல்வி ஆவண சரிபார்ப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில்முனைவோர்

கனடாவில் 8 லட்சத்திற்கும் அதிகமான குடியேறுபவர்கள் சுயதொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

தொழில்நுட்பம், விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

கனடாவின் புதிய குடியேற்றத் திட்டங்கள், நாட்டின் பொருளாதார தேவைகளுக்கேற்ப மாற்றப்பட்டு வருகின்றன.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article