7.3 C
Scarborough

17 வயதான தமிழ் இளைஞனுக்கு கனடாவில் மிக உயரிய ‘Howard Bar’ விருது!

Must read

கனடாவில் மிக உயரிய ‘Howard Bar’ விருது 17 வயதான Rughesh Vageesanக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோவில் 500 இராணுவ Cadetsகளில் இருந்து 13 பேர் மட்டுமே இந்த உயரிய விருதிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இதில் Rughesh மட்டுமே தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது பெருமைக்குரிய விடயமாகும்.

கனடாவின் Army Cadet Program உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய மேஜர் ஜெனரல் வில்லியம் ஹோவர்டின் (Major-General William Howard) நினைவாக Army Cadet League of Canada அமைப்பினால் இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த விருது, சேவை மனப்பான்மை, தலைமைத்துவ திறன், சமூக சேவை, ஒழுக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் Cadets-களுக்கே வழங்கப்படுகிறது.

இந்த விருதைப் பெறுவது, Gold Star Army Cadet ஆக சிறப்பான சாதனையைப் பெற்றதற்கான மிக உயரிய அங்கீகாரம் என்று Army Cadet League தெரிவித்துள்ளது.

Rughesh Vageesan, கனடாவில் புகழ்பெற்ற பரத நாட்டிய ஆசிரியை நாட்டிய விசாரதா, கலைச்சாரதி, சிறிமதி கலைமதி வாகீசனின் இளைய புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article