இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், கலிகாட் கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் வயலில் விளையாடிக் கொண்டிருந்த ஆர்யன் எனும் ஐந்து வயது சிறுவன் 150 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான்.
இதையறிந்த கிராம மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுவனை மீட்கும் பணியில் இரண்டு நாட்களாக ஈடுபட்டனர்.
அதன்படி, முதலில் சிறுவன் சுவாசிக்க ஏற்றதாக ஒட்சிசன் குழாயை குழிக்குள் அனுப்பி வைத்த மீட்பு குழுவினர், பின் சிறுவனின் அசைவுகளை கவனிக்க கெமராக்கள் மூலம் அவதானித்தனர்.
பின்னர் துளையிடும் இயந்திரங்களைப் பயன்படுத்தி குழிகள் தோண்டி, உள்ளே இறங்கிய மீட்புப் படையினர் சுமார் 55 மணித்தியால போராட்டத்தின் பின்னர் நேற்று இரவு 10 மணியளவில் சிறுவனை உயிருடன் மீட்டனர்.
மீட்கப்பட்ட சிறுவன் மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.