8.6 C
Scarborough

14 உயிர்களைக் காப்பாற்றிய பேருந்து சாரதி

Must read

சாமர்த்தியமாகச் செயல்பட்டு 14 உயிர்களைக் காப்பாற்றிய பேருந்து சாரதி
பதுளையிலிருந்து அனுராதபுரம் நோக்கி இன்று (12) காலை பயணித்த கெகிராவ இ.போ.ச சாலைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றின் பிரேக் (Brake) செயலிழந்த போது, சாரதி பேருந்தை பாதுகாப்பு சுவரில் மோதி நிறுத்தி 14 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

காலை 6.35 மணியளவில் பதுளையிலிருந்து பயணத்தை ஆரம்பித்து பதுளை – மஹியங்கனை வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த போது, பதுளை துன்ஹிந்த வளைவுக்கு அருகில் பேருந்துன் பிரேக் செயலிழந்ததாகவும், தான் உடனடியாக பேருந்தை பாதுகாப்பு சுவரில் மோதி நிறுத்தியதாகவும் சாரதி ஜனக துஷார ‘அத தெரண’விடம் தெரிவித்தார்.

சிறு கீறல் கூட ஏற்படாமல் பயணிகள் அனைவரும் காப்பாற்றப்பட்டதாகவும், அவ்வாறு செய்திருக்காவிடின் பேருந்து ஆயிரம் அடி பள்ளத்தில் கவிழ்ந்து பாரிய விபத்து ஏற்பட்டிருக்கும் எனவும் துஷார மேலும் தெரிவித்தார்.

இது குறித்து கருத்து வெளியிட்ட பேருந்து நடத்துனர், “நான் பயணிகளிடம் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுமாறு கூறினேன். சாரதி மிகச் சரியாகக் கணித்து பாதுகாப்பு சுவரில் பேருந்தை மோதச் செய்து நிறுத்தினார்” எனக் கூறினார்.

கடந்த காலங்களில் இந்த வீதியில் பல கோர விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவை அனைத்திற்கும் பிரேக் கோளாறுகளே காரணம் எனவும் பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article