ஐந்து ஹொக்கி வீரர்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துள்ள நிலையில் நீதிபதி தீர்ப்பை வழங்க உள்ளார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மைக்கேல் மெக்லியோட், கார்ட்டர், ஹார்ட் மற்றும் அலெக்ஸ ஃபோர்மென்டன் உள்ளிட்ட ஐந்து முன்னாள் கனேடிய ஜூனியர் ஹொக்கி வீரர்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணையில் உள்ளனர்.
இந்த சம்பவம் விழா ஒன்றின் கொண்டாட்டத்தின் பின்னர் 2018 ஆம் ஆண்டு லண்டன், ஒன்டாரியோ ஹோட்டல் அறையில் நடந்தது.
குறித்த பெண் சம்மதம் தெரிவித்ததாக வீரர்கள் கூறுகின்றனர், ஆனால் அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று வழக்குரைஞர்கள் வாதிடுகின்றனர்.
குறித்த பெண் 5 வீரர்களில் ஒரு வீரருடன் அறைக்கு செல்ல சம்மதம் தெரிவித்த நிலையில் ஏனைய 4 வீரர்களும் இணைந்து பெண்ணை தவறாக பயன்படுத்தியதாகவும் பாதுகாப்பு கருதி குறித்த பெண் அதற்கு இணங்க வேண்டி ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்த சம்பவத்தின் தீர்ப்பு நாளை ஜூலை 24 அன்று வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.