கரீபியன் தீவு நாடான ஹைதியில் அரசாங்கத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு மோதல் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் அங்குள்ள லபோடரி என்ற கிராமத்திற்குள் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விரைவில் உள்நாட்டு மோதலை கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.