ஹைட்டியில் குற்றவியல் குழுக்களால் வன்முறைச் செயல்கள் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நாட்டின் பல பகுதிகளில் அவசரகால நிலையை அறிவிக்க நேற்று (10) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதன்படி, மூன்று மாத காலத்திற்கு அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கும் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்தில் தற்போதைய நெருக்கடி மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு விரைவாக தீர்வு காண இந்த நடவடிக்கை பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.