1.4 C
Scarborough

ஹசீனாவை கைது செய்ய இண்டர்போல் உதவியை நாடும் பங்களாதேஷ்

Must read

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள பங்களாதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கொண்டு வருவதற்கு சர்வதேச பொலிஸின் (இண்டர்போல்) உதவியை பங்களாதேசம் நாடி உள்ளது.

பங்களாதேசத்தில் மாணவர் போராட்டத்தால் ஆட்சி, அதிகாரத்தை இழந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பியோடி இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார்.

மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பங்களாதேசம் சர்வதேச தீர்ப்பாயம் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்துள்ளது. இதே வழக்கில் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்சாமன் கான் கமலுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் அடைக்கலமாகி உள்ள ஹசீனாவை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பங்களாதேசம் வலியுறுத்தி வருகிறது. இதற்கு இண்டர்போல் உதவியை நாடவும் தீர்மானித்து பூர்வாங்க ஏற்பாடுகளை அந்நாடு ஆரம்பித்துள்ளது.

பிடிவிறாந்துடன் இண்டர்போலுக்கு ஏற்கனவே ஒரு விண்ணப்பம் பங்களாதேசம் தரப்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article