தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பணவீக்கம் குறைவடைந்துள்ளது.
இதற்கமைய ஒக்டோபர் மாதத்தில் 2.7 வீதமாக பதிவாகியிருந்த நாட்டின் முதன்மை பணவீக்கம், நவம்பர் மாதத்தில் 2.4 வீதமாக குறைவடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 4.1 வீதமாக பதிவாகியிருந்த உணவு பணவீக்கம், நவம்பர் மாதத்தில் 3.6% ஆக குறைவடைந்துள்ளது.
அத்துடன், ஒக்டோபர் மாதத்தில் 1.5 வீதமாக காணப்பட்ட உணவு அல்லா பணவீக்கம், நவம்பர் மாதத்தில் மாற்றமின்றி 1.5% ஆகவே காணப்படுவதாகத் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

