டொரண்டோவில் உள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றுக்கு முன்பாக நடந்த துப்பாக்கிச் சூட்டில் பெண் சாரதி ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
செப்டம்பர் 3 ஆம் திகதி நண்பகலுக்கு சற்று முன்பு கீலே வீதி மற்றும் டொனால்ட் அவென்யூ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கீலே வீதியின் குறுக்கே உள்ள குறித்த பாடசாலைக்கு முன்னால் இரண்டு குழுக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
அப்போது அந்த வழியாக வாகனம் செலுத்தி சென்ற 31 வயது பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் சிக்கியுள்ளார்.
17 வயது சிறுவனும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார், மேலும் பாதிக்கப்பட்ட இருவரும் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுவன் பின்னர் துப்பாக்கிச் பிரயோகம் தொடர்பாக கைது செய்யப்பட்டார் என பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
இளைஞர் குற்றவியல் நீதிச் சட்ட விதிகளின் கீழ் கொலை முயற்சி, பொறுப்பற்ற முறையில் துப்பாக்கிச் சூடு மற்றும் அங்கீகரிக்கப்படாத துப்பாக்கியை வைத்திருந்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். கு
“சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்ட மற்றும் ஒருவர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டார்,” என்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.