13.5 C
Scarborough

வீட்டு வாடகை மோசடி – பெண்னொருவரை தேடி வைலைவீச்சு!

Must read

ரொரொண்டோவைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டு வாடகை மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவரை டொரொண்டோ பொலிஸார் தேடி வருகின்றார்.

வாடகை வீடுகளைத் தேடிய சுமார் 30 பேர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் பலரை ஏமாற்றி பணம் திரட்டியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்செயலுடன் தொடர்புடைய 50 வயது பெண்ணை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் 2024 ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 30 வரை நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

சந்தேகநபர், செண்டினல் ரோடு மற்றும் பின்ச் அவென்யு வெஸ்ட் பகுதியில் உள்ள ஒரு அடையாளம் தெரியாத குடியிருப்பு கட்டிடத்தின் மேலாளராக கடமையாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த காலக்கட்டத்தில், குறித்த பெண் 28 பேர் வாடகை வீடுகளை உறுதி செய்ய விரும்பிய நிலையில், அவர்களிடமிருந்து பணமாகவும், மின்னணு பணப்பரிமாற்றமாகவும் (e-transfer) பணம் பெற்றுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் தகவலின்படி, குறித்த பெண் வாடகையாளர்கள் குடியேறும் திகதிக்கு முன்னதாகவே தனது பதவியிலிருந்து விலகி, கட்டிடத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

இதனால், எந்தவொரு வாடகை வீட்டும் கிடைக்காமல், பாதிக்கப்பட்டவர்கள் மொத்தமாக 54,000 டொலர்களை இழந்துள்ளனர்.

டொரொண்டோவைச் சேர்ந்த 50 வயதான லைஞாலி அசுன்சியன் (Laighnalee Asuncion), என்ற பெண்ணை பொலிஸார் தேடி வருகின்றனர்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article