’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ 2-ம் பாகத்துக்கான பணிகள் நடைபெற்று வருவதாக இயக்குநர் பொன்ராம் தெரிவித்துள்ளார்.
பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக அளித்த பேட்டியில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ குறித்து பேசியிருக்கிறார் இயக்குநர் பொன்ராம். இது இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

