வியட்நாமில் சுற்றுலா பகுதியொன்றில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து காரணமாக மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான ‘ஹா லோங்’ விரிகுடாவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் மேலும் 11 பேர் உயிர் பிழைத்துள்ளனர். இந்நிலையில் பெரும்பாலான பயணிகள் தலைநகர் ஹனோயைச் சேர்ந்த வியட்நாமிய குடும்பங்கள் என தெரியவந்துள்ளது.
கனமழை காரணமாக காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் பல்வேறு தடை ஏற்பட்டிருப்பதாக மீட்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
விபத்து நடந்தபோது குறித்த படகில் 53 பேர் இருந்ததாகவும் விபத்தில் இறந்தவர்களில் எட்டு பேர் குழந்தைகள் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.