4 C
Scarborough

விடுமுறைக் காலத்தில் அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கான பயணங்கள் அதிகரிப்பு!

Must read

விடுமுறைக் காலப் பயணங்கள் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கான பயணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும், கனேடியர்கள் அமெரிக்காவுக்குப் பயணம் செய்வதில் ஆர்வம் குறைந்துள்ளதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

​October மாதத்தில், Car மூலம் கனடா திரும்பியவர்களின் எண்ணிக்கை 30.2 சதவீதம் குறைந்து 1.6 மில்லியனாகப் பதிவாகியுள்ளது. அதே சமயம், விமானம் மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்கள் சுமார் 15 சதவீதம் குறைந்துள்ளன.

கனேடியர்கள் இப்போது அமெரிக்காவில் நடக்கும் எதற்கும் தாங்கள் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை என்று கூறி, ஏனைய இடங்களுக்குப் பயணம் செய்யத் தேர்வு செய்கிறார்கள்.

பரபரப்பான விடுமுறை கால பயணத் தொடரில், December 17 முதல் January 5 வரையிலான காலப்பகுதியில் Toronto வின் Pearson International Airport, 3.2 மில்லியன் பயணிகளை எதிர்பார்க்கிறது. கனடாவின் மிகவும் பரபரப்பான இந்த விமான நிலையத்தில், போக்குவரத்து அதிகமாக இருக்கும் நாட்களில் சுமார் 1,000 விமானங்களின் மூலம் ஒரு நாளைக்கு 1,71,000 பயணிகள் பயணிப்பார்கள் என கணிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்ற ஒரு நிலைதான் Vancouver International Airport இலும் காணப்படுகிறது. இந்த மேற்கத்திய விமான போக்குவரத்து மையம், ஒட்டுமொத்த பயணிகளின் எண்ணிக்கையில் சாதனை படைக்கும் ஆண்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தாலும், அமெரிக்காவிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

அதே வேளையில், October மாதத்தில் கனடாவுக்குப் பயணம் செய்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை 1,814,406 ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் பதிவான 1,760,987 பயணிகளுடன் ஒப்பிடுகையில் 3 சதவீதம் அதிகமாகும்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article