பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பத்தின் தலைமையில் தையிட்டி திஸ்ஸ விகாரை இடித்து அழிக்க வருமாறு அழைப்பு விடுத்து போலியான சுவரொட்டிகள் வடக்கில் ஒட்டப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ள சுவரொட்டியை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர் அந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த போலி சுவரொட்டியில்,
“விகாரையை இடிக்க வாரீர்
சிங்கள ஆக்கிரமிப்பின் சின்னமாய் விளங்கும் தையிட்டி திஸ்ஸ விகாரையை இடித்தழிக்கும் மாபெரும் புரட்சிப் போராட்டம்!
காலம்: 08/02/2025 சனிக்கிழமை
நேரம் : காலை 10 மணி
தலைமை : கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
அனைவரும் அணி திரண்டு வாரீர்! வரும்போது அலவாங்கு, பிக்கான், மண்வெட்டி போன்ற
ஆயுதங்களை தாங்கி வாருங்கள்.
விகாரையை இடிப்போம் – விடுதலை பெறுவோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.