ஒன்ராறியோவில் (Ontario) திருடப்பட்ட வாகனங்களை சட்டப்படுத்த பயன்படுத்தப்படும் “ரீ-வின்” (Re-VIN) மோசடிகளை தவிர்ப்பதற்காக, வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு முறைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் போர்டு தெரிவித்துள்ளார்.
வாகன அடையாள எண்ணான VIN மாற்றப்படும் போது, அது திருடப்பட்ட வாகனம் என்ற தகவல் மறைக்கப்படும். இதன் மூலம் மோசடி விற்பனையும் காப்பீட்டு மோசடியும் எளிதாக நடைபெறுகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அல்பெர்டா (Alberta) மற்றும் சாஸ்காச்சுவான் (Saskatchewan) மாகாணங்களில் வாகனங்கள் சரியான VIN கொண்டவையா என சரிபார்க்கப்படுகின்றன என்றாலும், ஒன்ராறியோவில் சரியான கணினி கண்காணிப்பு இல்லையென W5 வெளியிட்டுள்ளது.