ஸ்கார்பரோவில் நேற்று வெள்ளிக்கிழமை பகல் வேளையில் வாகனம் மோதியதில் 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக மாலை 5 மணியளவில் ஸ்டீல்ஸ் அவென்யூ கிழக்கு மற்றும் மிட்லாண்ட் அவென்யூ சந்திப்பிற்கு அவசரகால குழுவினர் அழைக்கப்பட்டனர்.
“அவசரகாலப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உயிர்காக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். எனினும் துரதிர்ஷ்டவசமாக, 24 வயது பெண் பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது,” என்று கடமை ஆய்வாளர் எரோல் வாட்சன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
விபத்துதான் தொடர்புடைய 59 வயதுடைய சாரதி சம்பவ இடத்திலேயே இருந்து விசாரணைக்கு ஒத்துழைத்ததாக அவர் கூறினார்.
“இது நம்பமுடியாத அளவிற்கு இதயத்தை உடைக்கும் சம்பவம், இந்த கடினமான நேரத்தில் நாம் குடும்பத்தினரின் நிலையை சிந்திக்கிறோம்” என்று வாட்சன் கவலை தெரிவித்துள்ளார்.
“எங்கள் போக்குவரத்து சேவைகள் பிரிவு அனைத்து உண்மைகளையும் சேகரிக்க செயல்பட்டு வருகிறது, மேலும் நாம் விசாரணையைத் தொடரும்போது பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.”என அவர் மேலும் கேட்டு கொண்டுள்ளார்.
இதேவேளை வெள்ளிக்கிழமை மாலை 4:45 மணி முதல் மாலை 5:30 மணி வரை அப்பகுதியில் இருந்த அல்லது சம்பவத்தை நேரில் பார்த்தவர்களை 416-808-1900 என்ற எண்ணில் புலனாய்வாளர்களையோ அல்லது 416-222-TIPS (8477) என்ற எண்ணில் க்ரைம் ஸ்டாப்பர்களையோ தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை கேட்டு கொண்டுள்ளது.