கனடாவின் நயாகரா பகுதியில் வாகனக் கொள்ளையில் ஈடுபட்ட 30 பேர் கடந்த வியாழன் அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 213 குற்ற செயல்களை எதிர்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
4 மில்லியன் டொலர் பெறுமதியான 38 திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவற்றில் சில துறைமுகங்களில் ஏற்றுமதிக்கான நிறுத்தப்பட்டவை என கூறப்படுகிறது.
அத்துடன் சட்ட அமுலாக்கப் பிரிவினர் $ 260,000 மதிப்புள்ள போதைப் பொருட்களையும் (கோகைன் மற்றும் MDMA உட்பட), 17 நீண்ட துப்பாக்கிகள், மூன்று கைத்துப்பாக்கிகள் மற்றும் $500,000 ரொக்கப் பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
புரொஜெக்ட் ரோட் கிங் என்ற பெயரில் பல மாதங்கள் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரொரன்டோ பொலிஸார், கனடிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் கனடிய பொலிஸார் ஆகிய பிரிவுகள் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.