19.5 C
Scarborough

வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அளித்த டில்லி மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி

Must read

70 தொகுதிகளை கொண்ட டில்லி மாநில சட்டமன்றத்திற்கு கடந்த 5ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 60 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பா.ஜ.க. முன்னிலை பெற்றது.

இந்திய நேரப்படி  பகல்  2.45 மணி நிலவரப்படி பா.ஜ.க. 48 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அம் ஆத்மி 22 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஏறக்குறைய இதுதான் இறுதி முடிவாக இருக்க வாய்ப்புள்ளது. இல்லையெனில் ஒன்றிரண்டு இடங்களில் மாற்றம் ஏற்படலாம்.

இதனால் 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் தலைநகர் மாநிலமான டில்லியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க இருக்கிறது.

பா.ஜ.க. ஆட்சியை பிடித்த நிலையில் பிரதமர் மோடி வெற்றி குறித்து கூறியதாவது:-

வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அளித்த டில்லி சகோதர மற்றும் சகோதரிகளுக்கு தலைவணங்குகிறேன்.

இந்த ஆசீர்வாதங்களைப் பெறுவதில் நாங்கள் பணிவும் பெருமையும் அடைகிறோம். டில்லி மாநிலத்தின் அனைத்து துறையின் வளர்ச்சியையும் பா.ஜ.க. உறுதி செய்யும். டில்லி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவோம். இது எங்களுடைய வாக்குறுதி. இதை நிறைவெற்றும் வரை ஓயமாட்டோம்.

டில்லி தேர்தலில் வெற்றி பெற உழைத்த அனைத்து பா.ஜ.க. தொண்டர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். தேர்தல் வெற்றியை தொடர்ந்து பா.ஜ.க-வினர் மேலும் தீவிரமாக உழைத்து டில்லி மக்களுக்கான சேவை செய்வோம்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article