இஸ்ரேலியப் பணயக்கைதியான அர்பெல் யஹூட் உட்பட மேலும் 6 பணயக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து வடக்கு காசாவுக்குள் பலஸ்தீனியர்கள் நுழைய இஸ்ரேல் அனுமதியளித்துள்ளது.
இன்று (27) பலஸ்தீனியர்கள் நெட்சாரிம் பாதை வழியாகக் கால்நடையாக கடக்க அனுமதிக்கப்பட்டனர். இது போரின் ஆரம்பத்தில் இஸ்ரேல் உருவாக்கிய இராணுவ மண்டலமாகும். இந்த பாதை வழியாக காசாவின் வடக்கு பகுதிக்கு பல்லாயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் திரும்பினர்.