மஹிந்த ராஜபக்ச நாட்டின் தேசிய சொத்து. அவரால்தான் வடமாகாணம் பிரிந்து தனிநாடாவது தடுக்கப்பட்டது. எனவே, மஹிந்தவுக்குரிய அரச வதிவிடம் மற்றும் பாதுகாப்பு என்பன வழங்கப்பட வேண்டும் என்று எஸ்.எம்.ரஞ்சித் சமரகோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
மஹிந்த ராஜபக்சவை நாம் அனைவரும் மதிக்கின்றோம். அவர் தேசிய சொத்து. அவருக்கு தீங்கு எற்படுவதை எவரும் விரும்பமாட்டார்கள். நாம் அரசியலில் எந்த பக்கம் இருந்தாலும் அவருக்காக முன்னிலையாவோம். அவரால்தான் வடக்கு, கிழக்கு பிரியாது நாடு பாதுகாக்கப்பட்டது.
வடக்கை வழங்கி இருந்தால் எத்தனை அரச கட்டங்களை வழங்கி இருக்க வேண்டும்? நாட்டையும், வளங்களையும் பாதுகாத்த தலைவர்தான் மஹிந்த. எனவே, அவருக்குரிய அனைத்தும் வழங்கப்பட வேண்டும்’ – என்றார்.