17.3 C
Scarborough

வடக்கு கிழக்கு மக்கள் சூழ்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும்! அமைச்சர் கருத்து

Must read

அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து திரிபுபடுத்தப்பட்ட கதைகள் மற்றும் பொய்யான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் இது விடயத்தில் மக்கள் உண்மைகளை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் எனவும் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ வடக்கு மற்றும் கிழக்கு மக்களை வலியுறுத்தியுள்ளார்.

இடமாற்றம் செய்யப்பட உள்ள முல்லைத்தீவு சிவன்நகர் முகாமுக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதாகக் கூறப்படும் ஒரு நபரின் மரணம் தொடர்பாக நாளை (18) அமைதி போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும், மூன்று இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

“சில அரசியல் குழுக்கள் தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலமும், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்துவதன் மூலமும் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றன. பொதுமக்கள் உண்மைகளைப் புரிந்துகொண்டு அமைதியாகச் செயல்படுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article