‘லவ் டுடே’ படத்தின் 2-ம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
‘டியூட்’ படத்தினை விளம்பரப்படுத்த பேட்டிகள் அளித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இதில் ‘லவ் டுடே 2’ உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக “’லவ் டுடே 2’ படம் இயக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்கான கதையின் யோசனையும் தயாராக இருக்கிறது.
ஆனால், நான் அதை இப்போது செய்ய மாட்டேன். வேறு சில கதைகளில் எனது கவனத்தை செலுத்தவுள்ளேன். அதனைத் தொடர்ந்து ‘லவ் டுடே 2’ பற்றி யோசிப்பேன்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ‘லவ் டுடே 2’ உருவாவது உறுதி என்பது தெரிகிறது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நாயகனாக நடித்த படம் ‘லவ் டுடே’. இதில் ராதிகா, யோகி பாபு, இவானா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் இசையமைப்பில் வெளியான இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது. இப்பட்ம தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி அங்கும் வரவேற்பைப் பெற்றது.

