இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. டெஸ்ட் தொடர் நிறைவடைந்த உடன் இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகிற 30-ம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. கே.எல். ராகுல் தலைமையிலான அந்த அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்பதற்காக லண்டனில் இருந்து இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி இன்று இந்தியா வந்தடைந்துள்ளார். மும்பை விமான நிலையத்திலிருந்து அவர் வெளியே வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். விராட் கோலி ஏறக்குறைய 6 மாதங்கள் கழித்து மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
dailythanthi

