ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன், சஞ்சய் தத், அக் ஷய் கன்னா உள்பட பலர் நடித்துள்ள இந்தி திரைப்படம், ‘துரந்தர்’. ஆதித்யா தார் இயக்கியுள்ள இந்தப் படம் கடந்த டிச.5-ம் தேதி வெளியானது. வரவேற்பைப் பெற்று வரும் இப்படம் இதுவரை ரூ.1,100 கோடிக்கும் மேல் வசூலை எட்டியுள்ளது.
வளைகுடா நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள இப்படம், பிரிவினை வாதத்தைத் தூண்டுவதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே இந்தப் படத்திலிருந்து சில சர்ச்சைக்குரிய காட்சிகள் சமீபத்தில் நீக்கப்பட்டன.

