Ontario மாகாணத்தின் Premier Doug Ford, Toronto நகரில் உலகத்தரம் வாய்ந்த, பிரம்மாண்டமான புதிய மாநாட்டு மையம் (Convention Centre) ஒன்று கட்டப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள Metro Toronto Convention Centre (MTCC) 442,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளார்.
புதிய மையம் சுமார் 2 மில்லியன் சதுர அடி பரப்பளவில், தற்போதைய மையத்தை விட பல மடங்கு பெரியதாக அமையும் என்றும் தெரிவித்தார்.
போதிய இடவசதி இல்லாத காரணத்தால், கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 20 சர்வதேச மாநாடுகளை டொரண்டோ இழந்துள்ளதாக Doug Ford சுட்டிக்காட்டினார்.
இதன் மூலம் சுமார் $490 மில்லியன் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கையாளர் அறிக்கை கூறுகிறது.
உலகின் மோசமான மாநாட்டு மையங்களின் வரிசையில் MTCC 24-வது இடத்தில் உள்ளதாகக் குறிப்பிட்ட Premier, “உலகமே வியக்கும் வகையில்” (Awe) புதிய மையம் அமையும் எனத் தெரிவித்தார்.
புதிய மையம் அமையவுள்ள இடம் மற்றும் அதன் வடிவமைப்பு குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

