ரீஜண்ட் பார்க்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த கத்திக்குத்தில் பாதிக்கப்பட்ட இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை இரவு ரிவர் ஸ்ட்ரீட் மற்றும் ஜெரார்ட் ஸ்ட்ரீட் ஈஸ்ட் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் இரவு 11 மணி அளவில் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதிகாரிகள் வந்தபோது, காயமடைந்த இரண்டு பேரைக் கண்டதாகவும் அவர்களை கடுமையான காயங்களுடன்” மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்ததாகவும்தெரிவித்துள்ளனர் .
சந்தேகத்திற்குரிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதோடு விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.