16.4 C
Scarborough

ராம்சரணின் ஆர்.சி 16 குறித்து வெளியான அப்டேட்

Must read

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் தனது 16ஆவது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார்.

ராம் சரணுடன் ஜான்விகபூர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இயக்குநர் புச்சி பாபு இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மைசூரைத் தொடர்ந்து, அடுத்த கட்டப் படப்பிடிப்பு வரும் 27ஆம் திகதி ஐதராபாத்தில் உள்ள பூத் பங்களாவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article