14.6 C
Scarborough

ராஜபக்‌ஷர்களின் எதிர்ப்பு எங்கள் பயணத்திற்கான கௌரவமாகும்!

Must read

கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பiது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான ராஜபக்ச குடும்பத்தின் எதிர்ப்பு ,அந்த குடும்பத்தின் கரங்களில் அப்பாவிகள் கொல்லப்பட்டதை அங்கீகரிக்கும் சரியான பாதையில் நாம் சென்றுகொண்டிருக்கின்றோம்என்பதற்கான உறுதியான சமிக்ஞை

ராஜபக்ச குடும்பம் இனப்படுகொலை இடம்பெறவில்லை என உறுதியான நம்பிக்கைகொண்டிருந்தால்; நீதியை குழப்புவதற்கான நடவடிக்கைள்,வழக்கு விசாரணையிலிருந்து மறைந்திருத்தல் போன்றவற்றை கைவிட்டுவிட்டு சர்வதேச விசாரணைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.

இது அவர்களின் நியுரம்பேர்க் தருணம்,இந்த குடும்பம் பொறுப்புக்கூறலை எதிர்கொள்வதற்கு பதில், இலங்கை அரசால் பாதுகாக்கப்பட்ட நிலையில்,ஆடம்பரத்தில் மறைந்துள்ளது. இது வெட்கக்கேடான விடயம்.

ராஜபக்ச குடும்பம் இழைத்துள்ள மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போல்பொட் ,ஸ்லோபடான் மிலோசோவிக்,ஹென்றிச் ஹிம்லர்,மற்றும் புளிசியான் கபுகா ஆகியோர் இழைத்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுடன் போட்டியிடும் அளவிற்கும் மோசமானவை.

கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பiது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article