ரஷ்ய – உக்ரைன் போரை ’மோடியின் போர்’ எனக் குறிப்பிட்டு அமெரிக்க ஜாதிபதியின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ பேசியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக அவர் பேசியதாவது:
“ரஷ்ய – உக்ரைன் போர் ’மோடியின் போர்’. ரஷ்யாவின் மசகு எண்ணெயை இந்தியா வாங்குவது, மாஸ்கோவின் இராணுவ ஆக்கிரமிப்பைத் தூண்டுகிறது.
இந்தியா தொடர்ந்து பிடிவாதமாக இருக்கிறது. தாங்கள் விரும்பும் எவரிடமிருந்தும் எண்ணெய் வாங்குவோம். அது எங்களின் இறையாண்மை எனக் கூறுகிறார்கள்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் மசகு எண்ணெய் வாங்குவதன் மூலம், அவர்களுக்கு கிடைக்கும் பணத்தை போர் இயந்திரத்துக்கு நிதியளிக்கப் பயன்படுத்துகிறார்கள். இது மேலும் பல உக்ரேனியர்களைக் கொல்லும்.
ரஷ்யாவிடம் மசகு எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், இந்தியா மீதான வரியை 25 சதவிகிதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.