ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே சீனாவில் தனிப்பட்ட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த இவர்கள், உச்சி மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் தனிப்பட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்தவுள்ள இந்த மாநாட்டில், உக்ரைன் மற்றும் காஸா விடயங்களிலும் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் இருபது நாடுகள் பங்குபற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது