19.2 C
Scarborough

ரஷ்யாவில் மனிதர்​களிடம் நடத்​தப்​பட்ட புற்றுநோய் தடுப்பூசி சோதனை வெற்றி

Must read

புற்​று​நோய்க்கு தடுப்​பூசி உரு​வாக்​கும் பணி​யில் ரஷ்​யா​வின் தேசிய கதிரியக்க மருத்​துவ ஆராய்ச்சி மைய​மும் ஏங்​கல்​ஹார்ட் மூலக்​கூறு உயி​ரியல் நிறு​வன​மும் இணைந்து செயல்​பட்டு வந்​தன. பல ஆண்டு கால முயற்​சி​யின் பலனாக புற்​று​நோய்க்கு என்ட்​ரோமிக்ஸ் என்ற தடுப்​பூசியை உரு​வாக்​கி​யுள்​ள​தாக அவை அறி​வித்​தன.

கரோனா தடுப்​பூசிகளைப் போலவே அதே எம்​-ஆர்​என்ஏ தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்தி இது உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. புற்​று​நோய் செல்​களை நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்​டலம் அடை​யாளம் கண்டு அகற்​றும் வகை​யில் இது வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

கீமோதெரபி, கதிர்​வீச்சு போன்ற பக்​க​விளைவை ஏற்​படுத்​தும் கடின​மான பாரம்​பரிய சிகிச்​சைகளுக்கு பாது​காப்​பான மாற்​றாக இது இருக்​கும் என கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில் 48 தன்​னார்​வலர்​களிடம் நடத்​தப்​பட்ட ஆரம்​பகட்ட சோதனை​யில் இந்த தடுப்​பூசி 100% பாது​காப்பு மற்​றும் செயல்​திறனை நிரூபித்​துள்​ள​தாக ரஷ்யா அறி​வித்​துள்​ளது.

சோதனை​யில் நோயாளி​களுக்கு புற்​று​நோய் கட்டி சுருக்​கம் ஏற்​பட்​ட​தாக​வும் கடுமை​யான பக்க விளைவு​கள் எது​வும் இல்லை என்​றும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. செயின்ட் பீட்​டர்​ஸ்​பர்க் சர்​வ​தேச பொருளா​தார மன்​றத்​தின் 2025-ம் ஆண்​டுக்​கான கூட்​டத்​தில் இந்த அறி​விப்பு வெளி​யாகி​யுள்​ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article