15.1 C
Scarborough

ரவிமோகன் இயக்கத்தில் யோகி பாபு

Must read

ரவி மோகன் இயக்கவுள்ள படத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது.

’கராத்தே பாபு’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, கார்த்திக் யோகி படத்தினை தொடங்கவுள்ளார் ரவி மோகன். இதில் நாயகனாக நடிப்பது மட்டுமன்றி தயாரிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார். இதன் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முடித்துவிட்டு இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் ரவி மோகன்.

யோகி பாபு நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தினை இயக்கி, தயாரிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார் ரவி மோகன். தற்போது தனது படப்பிடிப்பு இடைவெளிக்கு இடையே, யோகி பாபு நடிக்கவுள்ள கதையின் பணிகளை கவனித்து வருகிறார். ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கலாமா என்ற ஆலோசனையில் இருக்கிறார் ரவி மோகன். இதனை சமீபத்திய பேட்டியொன்றில் யோகி பாபு உறுதிப்படுத்தி இருக்கிறார்.

ரவி மோகன் நடிப்பில் அடுத்ததாக ‘ஜீனி’ வெளியாகவுள்ளது. வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article