முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்ட மதுபான சாலை அனுமதிப் பத்திரங்கள் தொடர்பிலான தகவல்களை அரசாங்கம் வௌியிட்டுள்ளது.
அதன்படி முன்னாள் ஜனாதிபதி ரணிலினால் FL4 எனப்படும் சில்லறை (wine stores) அனுமதிப் பத்திரங்கள் (மாவட்டவாரியாக கிளிநொச்சிக்கே அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2024 ஜனவரிக்குப் பிறகு 362 அனுமதிப் பத்திரங்களும் 174 FL4 அனுமதிப்பத்திரங்களும் இவ்வாறு அப்போதைய ஜனாதிபதியின் கீழிருந்த நிதியமைச்சின் மூலமாக வழங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.