முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள இந்தியா சென்றிருக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகிய இருவரும் மதுரை மீனாட்சி அம்மனை இன்று (22) தரிசனம் செய்தனர்

