முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட உள்ளதாக பதிவிட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் சுதந்த திலகசிறி மீது ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணிகள் முறைப்பாடு அளித்தனர்.
குறித்த கைது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக சந்தேகம் இருப்பதாக சட்டத்தரணி நளின் பத்திரண ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
“நீதிமன்றத்தின் தீர்மானத்தை பற்றி தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாகவே குறித்த யூடியூபர் எவ்வாறு அறிந்தார் என நாம் ஆச்சரியப்படுகிறோம்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சாமர சம்பத் தசநாயக்க மற்றும் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட சில எம்.பி.க்களும் இதே சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
சமீபத்திய பொது நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மீது தேவையற்ற அன்பை வெளிப்படுத்தியதாக யூடியூபர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
“பிரதமர் போன்ற ஒரு ஆளுமைக்கு பொதுவில் எப்படி இவ்வளவு அன்பை வெளிப்படுத்த முடியும்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.