நயன்தாரா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் நெல்சன்.அந்த படம் ஹிட்டான பின்னர் நெல்சனுக்கு சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் விஜய்யின் கூட்டணியில் பீஸ்ட் படம் வெளியானது.
இதை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் 2023ம் ஆண்டு ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ படம் உருவாகி வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். முதல் பாகத்தை போல ‘ஜெயிலர் 2’ படத்திலும் மோகன் லால். சிவராஜ்குமார் ஆகியோர் கேமியோ ரோலில் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இயக்குநர் நெல்சன் இன்று தனது பிறந்தநாளை ரஜினிகாந்த் மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து ‘ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பட நிறுவனம் தங்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.