மொன்றியலுக்கு அருகிலுள்ள செயிண்ட்-யூஸ்டாச் (Saint-Eustache) பகுதியில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி இரண்டு சகோதரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரவு சுமார் 11:11 மணி அளவில், ‘கோர்போ வீதியில்’ (Corbo Street) உள்ள ஆறு வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென தீப்பிடித்தது.
இந்தக் குடியிருப்பின் அடித்தளத்தில் (Basement) உள்ள ஒரு வீட்டில் இருந்துதான் தீ பரவத் தொடங்கியுள்ளது.
தகவல் அறிந்து விரைந்து வந்த சுமார் 30 தீயணைப்பு வீரர்கள், கட்டடத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதயத் துடிப்பு நின்ற நிலையில் மீட்கப்பட்ட இரண்டு ஆண்களும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

