யுத்தம் நிறைவு செய்யப்பட்டதன் பலனாகவே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் கச்சத்தீவுக்கு செல்ல முடிந்தது. இல்லாவிட்டால் நடிகர் விஜயின் கதையை கேட்டுக்கொண்டு வீட்டுக்குள் திரைப்படமொன்றை பார்த்துக்கொண்டு இருக்க வேண்டிய நிலைமை இருந்திருக்கும்.
குறிப்பாக கடற்படையினரே கச்சதீவை பாதுகாக்கின்றனர். அவ்வாறிருக்க முன்னாள் கடற்படை தளபதியை சிறையிட்டு கடற்படையின் படகிலேயே கச்சதீவிற்கு ஜனாதிபதி சென்று வருகின்றமை கவலைக்குரியது.
ஆனால் அவர் சென்று வந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். எது எவ்வாறாயினும் விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களினதும் பிரச்சினைகளுக்கும் நாங்கள் முன்னிலையாவோம்.
அதேநேரம் பொதுஜன பெரமுனவிலுள்ள இளம் தலைவர்கள் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும். அவர்களின் எதிர்காலத்தை வடிவமைத்துக்கொள்ள அவர்கள் முன்வர வேண்டுமென்றும். தந்தையரால் பிள்ளைகளை நெறிப்படுத்த முடியாவிட்டாலும் பிள்ளைகள் சரியான பாதையில் செல்ல பழகிக்கொள்ள வேண்டும்.
மேலும், தற்போதைய அரசாங்கம் ஒரு வருடமான என்ன செய்தது என்ற கேள்விக்குறி வந்துள்ளது. விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு மாறாக அவர்கள் அனைத்து பொருட்களையும் இறக்குமதி செய்கிறார்கள். எனவே அரசாங்கத்தின் போலி பிரசாரங்களால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது என்றார்.