13.2 C
Scarborough

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர்: கால் இறுதியில் அல்கராஸ், சபலென்கா!

Must read

நியூயார்க்: ​யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரில் ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ், செர்​பி​யா​வின் நோவக் ஜோகோ​விச், பெலாரஸின் அரினா சபலென்​கா, அமெரிக்​கா​வின் ஜெசிகா பெகுலா உள்​ளிட்​டோர் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறினர்.

அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றில் 2-ம் நிலை வீர​ரான ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ், 82-ம் நிலை வீர​ரான பிரான்​ஸின் ஆர்​தர் ரிண்​டர்க்​னெக்​குடன் மோதி​னார். இதில் கார்​லோஸ் அல்​க​ராஸ் 7-6 (7-3), 6-3, 6-4 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

கால் இறுதி சுற்​றில் அல்​க​ராஸ், 20-ம் நிலை வீர​ரான செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா​வுடன் மோதுகிறார். ஜிரி லெஹெக்கா 4-வது சுற்​றில் 77-ம் நிலை வீர​ரான பிரான்​ஸின் அட்​ரியன் மன்​னாரினோவை 7-6 (7-4), 6-4, 2-6, 6-2 என்ற செட் கணக்​கில் தோற்​கடித்​தார். 7-ம் நிலை வீரரும் 4 முறை சாம்​பியனு​மான செர்​பி​யா​வின் நோவக் ஜோகோ​விச் 4-வது சுற்​றில் 144-ம் நிலை வீர​ரான ஜெர்​மனி​யின் ஜான்​-லெ​னார்ட் ஸ்ட்​ரஃபுடன் மோதி​னார். இதில் ஜோகோ​விச் 6-3, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றில் நுழைந்​தார்.

கால் இறுதி சுற்​றில் ஜோகோ​விச், 4-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் டெய்​லர் ஃபிரிட்ஸை எதிர்​கொள்​கிறார். டெய்​லர் ஃபிரிட்ஸ் 4-வது சுற்​றில் 6-4, 6-3, 6-3 என்ற செட் கணக்​கில் 21-ம் நிலை வீர​ரான செக் குடியரசின் தாமஸ் மச்​சாக்கை தோற்​கடித்​தார். மகளிர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றில் முதல் நிலை வீராங்​க​னை​யும் நடப்பு சாம்​பியனு​மான பெலாரஸின் அரினா சபலென்​கா, 95-ம் நிலை வீராங்​க​னை​யான ஸ்பெ​யினின் கிறிஸ்​டினா புக்​சாவுடன் மோதி​னார். இதில் அரினா சபலென்கா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

கால் இறுதி சுற்​றில் சபலென்​கா, செக் குடியரசின் மார்க்​கெட்டா வோண்ட்​ரசோ​வாவுடன் மோதுகிறார். தரவரிசை​யில் 60-வது இடத்​தில் மார்க்​கெட்டா வோண்ட்​ரசோவா 4-வது சுற்​றில் 9-ம் நிலை வீராங்​க​னை​யான கஜகஸ்​தானின் எலெனா ரைபகி​னாவை தோற்​கடித்​தார். 4-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் ஜெசிகா பெகுலா 4-வது சுற்​றில் 58-ம் நிலை வீராங்​க​னை​யான சகநாட்​டைச் சேர்ந்த அன் லியை எதிர்த்து விளை​யாடி​னார். இதில் ஜெசிகா பெகுலா 6-1, 6-2 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றில் கால்​ப​தித்​தார்.

காலிறுதி சுற்​றில் ஜெசிகா பெகுலா, 62-ம் நிலை வீராங்​க​னை​யான செக் குடியரசின் பார்​போரா கிரெஜிகோ​வாவுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறார். பார்​போரா கிரெஜிகோவா 4-வது சுற்​றில் 139-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் டெய்​லர் டவுன்​செட்டை 1-6, 7-6 (15-13), 6-3 என்​ற செட்​ கணக்​கில்​ வீழ்​த்​தி​னார்​.

2-வது சுற்றில் மாயா: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஜூனியர் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மாயா ராஜேஷ்வரன், சீனாவின் ஜாங்-கியான் வெய் உடன் மோதினார். இதில், தமிழகத்தின் கோவையை சேர்ந்த 16 வயதான மாயா ராஜேஷ்வரன் 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். ஸ்பெயினின் மல்லோர்காவில் உள்ள ரஃபேல் நடால் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் மாயா ராஜேஷ்வரன், 2-வது சுற்றில் போட்டி தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள கிரேட் பிரிட்டனை சேர்ந்த ஹன்னா க்ளூக்மேனுடன் மோதுகிறார்.

ஆடவர் ஜூனியர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹிதேஷ் 2-6, 4-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜெரிட் கெய்ன்ஸிடமும், கிறிஸ் தியாகி 3-6, 1-6 என்ற செட் கணக்கில் சுவீடனின் லுட்விக் ஹெடேவிடமும் தோல்வி அடைந்தனர்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article