19.2 C
Scarborough

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னர், ஸ்வியாடெக் கால் இறுதிக்கு முன்னேற்றம்

Must read

யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரின் மகளிர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றில் 3-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் கோ கோ காஃப் அதிர்ச்சி தோல்வி அடைந்​தார். ஆடவர் பிரி​வில் ஜன்​னிக் சின்​னர், அலெக்ஸ் டி மினார், லோரென்சோ முசெட்டி உள்​ளிட்​டோர் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறினர்.

அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றில் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்​பியனு​மான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர் 6-1, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்​கில் 23-ம் நிலை வீர​ரான கஜகஸ்​தானின் அலெக்​சாண்​டர் பப்​ளிக்கை வீழ்த்தி கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். கால் இறுதி சுற்​றில் ஜன்​னிக் சின்​னர், 10-ம் நிலை வீர​ரான இத்​தாலி​யின் லோரென்சோ முசெட்​டியை எதிர்​கொள்​கிறார். லோரென்சோ முசெட்டி 4-வது சுற்​றில் 6-3, 6-0, 6-1 என்ற செட் கணக்​கில் 44-ம் நிலை வீர​ரான ஸ்பெ​யினின் ஜேமி முனாரை தோற்​கடித்​தார்.

8-ம் நிலை வீர​ரான ஆஸ்​திரேலி​யா​வின் அலெக்ஸ் டி மினார் 6-3, 6-2, 6-1 என்ற செட் கணக்​கில் 435-ம் நிலை வீர​ரான சுவிட்​சர்​லாந்​தின் லியாண்ட்ரோ ரீடியை தோற்​கடித்து கால் இறுதி சுற்​றில் கால்​ப​தித்​தார். கால் இறுதி சுற்​றில் அலெக்ஸ் டி மினார், கனடா​வின் பெலிக்ஸ் ஆகர் அலி​யாசி​முடன் பலப்​பரீட்சை நடத்​துகிறார். 25-ம் நிலை வீர​ரான பெலிக்ஸ் ஆகர் அலி​யாசிம் 4-வது சுற்​றில் 7-5, 6-3, 6-4 என்ற செட் கணக்​கில் 15-ம் நிலை வீர​ரான ரஷ்​யா​வின் ஆந்த்ரே ரூப்​லெவை வீழ்த்​தி​னார்.

மகளிர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றில் 3-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் கோ கோ காஃப், 23-ம் நிலை வீராங்​க​னை​யான ஜப்​பானின் நவோமி ஒசாக​வுடன் மோதி​னார். இதில் நவோமி ஒசாகா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்​கில் கோ கோ காஃபை தோற்​கடித்து கால் இறுதி சுற்​றில் நுழைந்​தார். கால் இறுதி சுற்​றில் நவோமி ஒசா​கா, செக் குடியரசின் கரோலினா முச்​சோ​வாவுடன் மோதுகிறார்.

11-ம் நிலை வீராங்​க​னை​யான கரோலினா முச்​சோ​வா, 4-வது சுற்​றில் 6-3, 6-7 (0-7), 6-3 என்ற செட் கணக்​கில் 27-ம் நிலை வீராங்​க​னை​யான உக்​ரைனின் மார்டா கோஸ்ட்​யுக்கை வீழ்த்​தி​னார். 2-ம் நிலை வீராங்​க​னை​யான போலந்​தின் இகா ஸ்வி​யாடெக் 6-3, 6-1 என்ற செட் கணக்​கில் 13-ம் நிலை வீராங்​க​னை​யான ரஷ்​யா​வின் கேத்​ரினா அலெக்​சாண்ட்​ரோ​வாவை வீழ்த்தி கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

கால் இறுதி சுற்​றில் இகா ஸ்வி​யாடெக், அமெரிக்​கா​வின் அமண்டா அனிசிமோ​வாவுடன் மோதுகிறார். 8-ம் நிலை வீராங்​க​னை​யான அமண்டா அனிசிமோவா 4-வது சுற்​றில் 6-0, 6-3 என்ற செட் கணக்​கில் 18-ம் நிலை வீராங்​க​னை​யான பிரேலிலின்​ பீட்​ரிஸ்​ ஹடாட்​ மையா​வை தோற்​கடித்​தார்​

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article