யாழ்ப்பாணத்தில் தொழில்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது சர்வதேச புத்தகத் திருவிழா இன்று (15) ஆரம்பமாகிறது. இந்நிகழ்வு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இன்று முதல் 17ஆம் திகதி வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதிலுமிருந்து முன்னணி புத்தக நிறுவனங்கள் பங்கேற்கும் இத்திருவிழாவில், பல்வேறு தலைப்புகளில் சிறந்த தரமான புத்தகங்கள் சிறப்பு விலைக்கழிவுகளுடன் விற்பனை செய்யப்படவுள்ளன. மேலும், அறிவுசார் மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக தொழில்துறை மன்றம் தெரிவித்துள்ளது