4.1 C
Scarborough

யாழில் சட்டவிரோத காணி அபகரிப்புக்கு உதவிய சட்டத்தரணிகள் மாயம்!

Must read

யாழ். குடும்மொன்றிற்கு சொந்தமான காணியொன்றை சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தி பிரிதொருவருக்கு விற்பனை செய்த விவகாரத்தில் சிக்கியிருக்கும் சட்டத்தரணிகள் சிலர் வழக்கு விசாரணைகளின் போது மன்றில் ஆஜராகாமல் ஓடி மறைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இவ்வாறு சட்டவிரோமான முறையில் அபகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் அதன் உரிமையாளர்கள் வழக்கு தொடுத்துள்ள நிலையிலேயே இவ்வாறு சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராவதை தவிர்த்து வருவதாக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

குறித்த சட்டத்தரணிகள் வெளிநாட்டவர்களின் காணிகள் அபகரிக்கப்படும் போது அதற்கு அவசியமான சட்டவிரோத காணி உரிமங்களை தயாரித்து வழங்கியவர்கள் என்ற குற்றச்சாட்டிற்கு இலக்காகியிருக்கும் நிலையில் அவர்களுக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருப்பதாகவும் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறான காணிகளை கொள்வனவு செய்யும் போது யாழ். மக்கள் மிகவும் அவதானமாக செயற்ட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article