24 C
Scarborough

யாழில் கடல் நீர் ஏரியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

Must read

கடல் நீர் ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 40 வயதான ராஜலிங்கம் சுபாஷினி என தெரிவிக்கப்படுகிறது.  அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (12) காலை செல்வச் சன்னதி ஆலயத்திற்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் இரவாகியும் வீடு திரும்பவில்லை என அவரது தந்தை தெரிவிக்கின்றார்.

தொண்டவன் ஆறு செல்வச் சன்னதி ஆலய கடல் நீர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் புகைப்படங்கள் செய்திகளில் வெளி வந்திருந்தன.

அவரது தந்தையார் தனது மகளை அடையாளம் கண்ட நிலையில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.

மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மீட்கப்பட்ட சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article