மொன்றியலுக்கு வெளியே உள்ள செயிண்ட்-யுஸ்டாச் (Saint-Eustache) புறநகர்ப் பகுதியில், ஒரு புதியவகை தட்டம்மை (Measles) நோய்ப் பரவலை, கியூபெக் பொதுச் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், தட்டம்மை பரவலின் முந்தைய அலை முடிவடைந்த பிறகு, கியூபெக் மாகாணத்தில் தட்டம்மைப் பரவல் மீண்டும் தொடங்கியுள்ளது.
சமீபத்திய அறிக்கைகளின்படி, மூன்று தட்டம்மை நோய்ப் பாதிப்புகள் அவதானிக்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று பாதிப்புகளும், குழந்தைகள் அவசர சிகிச்சை மையத்திலேயே பதிவாகியுள்ளன.
இந்த குழந்தைகள் அவசர சிகிச்சை மையத்திற்குச் சென்ற நபர்கள், மிக வேகமாகப் பரவக்கூடிய இந்த நோயின் அறிகுறிகள் குறித்து உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்று கியூபெக் பொதுச் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

