காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸ் அமைப்பினால் மேலும் மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விடுவிக்கப்பட்ட பணயக் கைதிகள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நீண்ட காலமாக ஹமாஸ் அமைப்பினால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த அவர்களின் மோசமான தோற்றத்தால் இஸ்ரேலியர்கள் கவலையடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 183 பாலஸ்தீன பணயக் கைதிகள் விடுக்கப்பட்டிருந்தன.
அதற்கு ஈடாகக் குறித்த 3 இஸ்ரேலிய பணயக்கைதிகளும் ஹமாஸ் அமைப்பினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இஸ்ரேலுக்கும் ஹமாஸிற்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.