7.9 C
Scarborough

மேற்கு வங்காள மாநில சட்டப் பேரவைக்கான இறுதிக் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

Must read

மேற்குவங்க வங்காள சட்டப்பேரவைக்கு இறுதி கட்ட தேர்தல் புதன்கிழமை (29) நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.

294 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்காள சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 152 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி அன்று நடைபெற்றது. மீதமுள்ள 142 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

முதல் கட்ட தேர்தலில் 93.1 சதவீத வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்ட தேர்தலில் மொத்தம் 3.21 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்காக 41,001 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதற்கட்ட வாக்குப்பதிவின் போது வாக்காளர்கள் இடத்தில் இருந்த ஆர்வத்தை போல்… தற்போது இரண்டாவது கட்ட வாக்குப்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது காலை 9 மணி நிலவரம் படி 18.3 சதவீத வாக்குகள் பதிவானதாகவும், பதினோரு மணி அளவில் 39.7 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனிடையே கேரளா- அசாம்- புதுச்சேரி – தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்று வந்த தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று மாலை 6:00 மணியுடன் நிறைவடைவதால்….6:30 மணி அளவில் வாக்குப்பதிவுக்குப்பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article